குழந்தைத்தனமான கருத்துகளை கூறி வருகிறார் ராகுல் காந்தி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

அனுபவமற்ற, குழந்தைத்தனமான கருத்துகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, மோடியிடம் பாஜகவினர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ராகுல் காந்தியின் விமர்சனங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, முன்பு புழக்கத்தில் இருந்த கிராமோ போனில் (Gramo phone) பிரச்னை ஏற்பட்டால், சில பாடல்கள் அல்லது, வசனங்கள் மட்டும் திரும்ப திரும்ப ஒலிப்பது போன்று ராகுல் பேசுவதாக கிண்டலாக விமர்சித்தார்.மேலும் அனுபவமற்ற குழந்தையை போன்ற கருத்துகளை ராகுல் காந்தி கூறி வருவதாகவும், இது போன்ற கருத்துகளால் மக்களை இப்போது ஏமாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசியவ அவர், வளர்ச்சி, அதிவேக வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை கொண்டு பாஜகவினர் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Also see…