கூகுள் சான்றிதழ் பெற்ற மைக்ரோமேக்ஸின் முதல் ஆண்ட்ராய்டு டிவி!

 மைக்ரோமேக்ஸ் இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் வெள்ளியன்று கூகுள் சான்றிதழ் பெற்ற அதன் முதல் ஆண்ட்ராய்டு டிவியை இரு வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அதற்கு பெயரிடவில்லை. முறையே, 49 இன்ச் மற்றும் 59இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் 10 டிவியின் விலை ரூ.51,990 மற்றும் ரூ.61,990 ஆகும்.தங்கள் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டிவி குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் ரோகன் அகர்வால் பேசுகையில், கூகுள் சான்றிதழ் பெற்ற முதல் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்திருக்கிறோம். அதன் மூலம் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்றும் நினைவில் நிற்கக்கூடிய பட தரத்தையும், அனுபவத்தையும் கூகுள் பிளேயுடன் இணைந்து எண்ணற்ற ஆப்ஷன்களை கொடுக்கிறோம். புதிய அறிமுகமான இந்த டிவி மூலம் பெரிய, தெளிவான, மிகத் துல்லியமான திரையில் படம் பார்த்ததற்கான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம். டிவி தயாரிப்பில் இந்தியாவில் எங்களின் நிலையை ஆணித்தரமாக நிலை நாட்ட முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.கூகுள் சான்றிதழ் பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூறுகையில், ஹெச்.டி.ஆர் தொழில்நுட்பம் அசரவைக்கும் பட தரத்தை வழங்கும் என்று உறுதியளித்தது. இந்த டிவி அதிகாரப்பூர்வமான கூகுள் பிளே அப்,கேம்ஸ்,மூவிஸ் மற்றும் மியூசிக்கை சப்போர்ட் செய்கிறது. இந்த டிவி ஆண்ட்ராய்டு ஓரியோவில் இயங்குகிறது. டால்பை மற்றும் DTS ஒலியமைப்பு. கோர்டெக்ஸ் ஏ-53 ப்ராசஸர், 2.5ஜிபி டி.டி.ஆர்3 மற்றும் 16ஜிபி இ.எம்.எம்.சி சேமிப்பு திறன் கொண்டது.உள்கட்டமைக்கப்பட்ட குரோம்காஸ்ட் மற்றும் MHL இணைப்பு, வாய்ஸ் சர்ச்சுடன் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் கண்ட்ரோலைக் கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் தங்களுடைய தனித்துவமான ஒலியமைப்பை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த டிவியில் 2*12w ஸ்பீக்கர்ஸ் உள்ளன. மின் திறன் எக்கோ எனர்ஜி சான்றிதழை பெற்றிருப்பதாக மைக்ரோமேக்ஸ் கூறியுள்ளது.மைக்ரோமேக்ஸின் ஆண்ட்ராய்டு டிவி இந்த மாதம் முதல் கடைகளில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை போன்களான, பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் மற்றும் பாரத் 4 தீபாவளி எடிஷனின் விலை ரூ. 5,899 மற்றும் ரூ. 4,249 ஆகும். பாரத் 5 ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. பாரத் 4 இன்று முதல் விற்பனை செய்யப்படும். 

Leave a Reply

Your email address will not be published.