கேரள இளைய தளபதி கோட்ட டா, அதற்கு இதுதான் சாட்சி- சர்கார் படம் வேறலெவல்

#Sarkar

முருகதாஸ்-விஜய் கூட்டணி என்றாலே அப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.இப்போது அவர்களின் கூட்டணியில் சர்கார் என்ற பெயரில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட களம் இறங்க இருக்கிறது. படத்தை படு பயங்கரமாக வரவேற்க பல திரையரங்குள் மாஸ் பிளான் போட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு திரையரங்கில் தொடர்ச்சி ஒரே நாளில் 8 காட்சிகள் அதாவது 24 மணி நேரமும் சர்கார் திரைப்படம் திரையிடப்படவுள்ளதாம்.சர்கார் படத்திற்காக கேரளாவில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தளபதி ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.