கொடநாடு விவகாரம்: முதல்வருக்கு அவப்பெயரை உண்டாக்க சதி – அமைச்சர் தங்கமணி

முதலமைச்சருக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் நோக்கத்தில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் அவரை தொடர்புபடுத்தி  பொய்கள் பரப்பப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மகளிருக்கு நாட்டுக் கோழிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அரசுக்கு எதிராக சதி செய்வதாக சாடினார்.மேலும் முதல்வர் பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே சரியான தண்டனையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசியவர், முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும் இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தான் அவர் மீது வீண் பழி சுமத்துகின்றனர்.  அவருக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் அவரை தொடர்பு படுத்தி  பொய்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Also see… கோடநாடு குற்றச்சாட்டும்… முதல்வர் விளக்கமும்…