சச்சின் கூட பெற முடியாத ஐசிசியின் மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்ற ராகுல் டிராவிட்!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டிற்கு, ஐசிசி ‘ஹால் ஆப் பேம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ராகுல் டிராவிட். தனது தடுப்பாட்டத்திற்காக மிகவும் பிரபலமான ராகுல் டிராவிட், 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 13288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10899 ரன்களும் குவித்துள்ளார். யார் எப்படி பந்து வீசினாலும் அதை சுவர் போல தடுத்து ஆடியதால், டிராவிட்டை அனைவரும் தி வால் (The Wall) என்றழைத்தனர்.

இந்நிலையில் சச்சின், கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் கூட வாங்காத ஐசிசியின் மிக உயரிய ‘ஹால் ஆப் பேம்’ கௌரவத்தை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

#RahulDravid inducted into ICC Hall of Fame by #SunilGavaskar❤️ #ICCHallOfFame https://t.co/rivX0PCMEb— Varunkumar Reddy (@im_varunkumar07) 1541062948000
இன்று நடைபெற்ற இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி துவக்கத்தில், இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, இந்தியாவின் முன்னாள் வீரரும் ஏற்கனவே இந்த கௌரவத்தைப் பெற்றவருமான சுனில் கவாஸ்கர் இதற்கான விருதை டிராவிட்டிடம் வழங்கினார்.

இதுவரையில், இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷான் சிங் பேடி, அனில் கும்பளே உள்ளிட்ட வீரர்களே இந்த கௌரவத்தைப் பெற்றிருந்த நிலையில், ராகுல் டிராவிட் இந்த கௌரவத்தைப் பெறும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.