சத்தீஸ்கரில் தேர்தலை புறக்கணிக்க நக்சல் அழைப்பு – போலீஸ் பாதுகாப்பு

சத்தீஸ்கரில் தேர்தல் புறக்கணிப்புக்கு நக்சலைட்டுகள் அழைப்புவிடுத்துள்ள நிலையில், முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12-ல் நடைபெறவுள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள 5 மாநிலங்களில், தேர்தலை முதலாவதாக சத்தீஸ்கர் சந்திக்கவுள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் அஜீத் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவும் சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில், முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் 12 தொகுதிகளில் நக்சல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருப்பதாலும் அங்கு பதற்றம் நிலவுகிறது.இந்த சூழலில் தேர்தல் நடைபெறவுள்ள தந்தேவாடா பகுதியில் பஸ் மீது குண்டு வீசப்பட்டதில் மத்திய படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்திருப்பது பதற்றத்தைக் கூட்டியுள்ளது. அதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்:

தேர்தல் சீட் கிடைத்துவிட்டாலே ஜெயித்துவிட்டதுபோன்ற மகிழ்ச்சி அரசியல்வாதிகளுக்கு ஏற்படுவது இயல்பு. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்யவிரத் சிங்கின் மகன் நிதின் சதுர்வேதி, காங்கிரஸில் சீட் கிடைக்காததால், சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். அதற்கு உடனடி பலனாக சீட் கிடைத்தது. அதனால் தந்தை மற்றும் ஆதரவாளர்கள் சகிதம், ராஜ்நகர் தொகுயில் உற்சாகமாக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இதுபோல், மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் பாபுலால் கவுரின் மருமகள் கிருஷ்ண கவுருக்கு சீட் கிடைத்ததால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெலங்கானா:

Loading…

ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கிய அரசியல் சாதுரியம் மிக்கவரான முதல்வர் சந்திரசேகரராவுக்கு மற்றோர் திறமையும் உண்டு. பாடல்களை எழுதுவதில் வல்லவரான ராவ், தெலங்கானா போராட்டத்தின்போது வெளியான, ஜெய் போலோ தெலங்கானா படத்தில், GARADI CHESTHURU எனத் துவங்கும் பாடலை எழுதினார். பாடல் படு ஹிட் ஆனது.

தன் பாடல் எழுதும் திறமையை தற்போது தேர்தலுக்கும் கேசிஆர் பயன்படுத்தியுள்ளார். அவரது கட்சிக்கு, தேர்தல் பிரசார பாடல்களை எழுதியிருப்பதுடன் மற்ற பாடல்களையும் ராவ் எடிட் செய்துள்ளாராம்.

Also see…