சபரிமலைக்கு வந்த பெண் பக்தரை தடுத்ததாக 200 பேர் மீது வழக்கு

சபரிமலையில் பெண் பக்தரை முற்றுகையிட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்புக்கு இடையே திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு மூடப்பட்டது.

திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மா-வின் பிறந்தாளை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் 2 நாட்களுக்கு திறக்கப்பட்டது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், போராட்டங்களை தடுக்கும் வகையில், நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சபரிமலையில் வழிபடும் பெண் பக்தர் லலிதா

நேற்று கோவிலுக்கு வந்த 52 வயதான லலிதா ரவி என்ற பெண்ணை, பக்தர்கள் சிலர் முற்றுகையிட்டு, சரண கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் காயமடைந்ததுடன், கேமராவும் உடைக்கப்பட்டது. அவரை மீட்ட போலீஸார், பத்திரமாக கோவிலுக்குள் அனுப்பிவைத்தனர். திருச்சூரைச் சேர்ந்த லலிதா, தனது பேரனுக்கு முதல் உணவு வழங்கும் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சபரிமலைக்கு வந்திருந்தார்.

சபரிமலையில் பெண் பக்தர் லலிதா

லலிதா அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியக்கூடிய 200 பேர் மீது சன்னிதானம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலையில் கலவரம் ஏற்படுத்த சிலர் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

Loading…

Kerala: Amrita TV cameraman Biju, injured during protests at #SabarimalaTemple over the entry of a woman devotee pic.twitter.com/ZbOqsbXS6u
— ANI (@ANI) November 6, 2018

இதனிடையே சபரிமலை பதினெட்டாம் படியில் இருமுடி இன்றி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் வல்சன் திலாங்கேரி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருமுடி இன்றி யாரும் பதினெட்டாம் படி ஏறக் கூடாது என்பது சபரிமலை கோயிலின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அந்த வழக்கத்தை வல்சன் திலாங்கேரி மீறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் தெரிவித்துள்ளார்.

Also see…