சமீபத்திய படங்களில் விஸ்வாசம் தான் செம ஹிட்- அழுத்தமாக கூறும் இயக்குனர்

#Viswasam
#Ajith Kumar
#Ameer

சினிமாவில் நாட்டுநடப்புகளை சீரியஸாக பேசக்கூடிய பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் இயக்குனரும், நடிகருமான அமீர்.இவர் பேரன்பு படத்திற்காக நடந்த ஸ்பெஷல் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது அவர் விஸ்வாசம் படம் குறித்தும் பேசியுள்ளார்.என்ன கூறினார் என்ற விவரம் இதோ, ஆடியன்ஸ் பொதுவாக இருக்கிறார்கள், நல்ல படம் வந்தால் பார்ப்பான். இந்த நடிகர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறுவது இல்லை.அஜித் ஒரு பெரிய மாஸ் ஹீரோ, பெரிய ஓப்பனிங் இருக்கு, ஆனால் அவருடைய படம் விஸ்வாசம் ரிலீஸ் ஆகி இருக்கிறது, ஒன்றுமே இல்லை அப்பா-மகள் பாசத்தை காட்டுகிறது.அதுதான் இப்போது பெரிய சக்சஸாக இருக்கிறது, சமீபத்திய பெரிய சக்சஸ் விஸ்வாசம் படம் தான் இருக்கிறது என்று பேசியுள்ளார்.