சரணகோஷம் போடுறார்… மோகன்லால்!

கேரளத்தில் சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக ஒருபுறமும் அரசுக்கு ஆதரவாக மற்றொரு புறமும் என பிரிந்து கிடக்கிறது கருத்துத் தளம்.ரஜினி காந்த், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவான கருத்துகளை இப்போதாவது கூற வேண்டும் என்றும், கருத்துத் தளங்களில் அவர்கள் வாய் திறந்தால்தான் அவர்களின் நிலைப்பாடு தெரியவரும் என்பதுடன், ஆதரவும் கூடும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், மோகன் லால் வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் இல்லாவிட்டாலும், தனது எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டார்.மோகன்லால் தனது பேஸ்புக்கில், ஸ்வாமி சரணம் என்று எழுதி, இரு கை கூப்பியது போல், ஐயப்பன்மார் வளர்க்கும் ஷேவ் செய்யப் படாத இயற்கையான தாடியுடன், ஐயப்பன்மார் அணியும் கறுப்புத் துண்டையும் அணிந்த படி ஒரு போஸ் கொடுத்து, தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பதிவு, ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக தானும் இருப்பது போன்ற கருத்துதான் என்று பலரும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.