சர்கார் அதிகாலை காட்சி இல்லையா? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

#Sarkar

சர்கார் படத்தின் முன்பதிவு தற்போது படிப்படியாக துவங்கியுள்ளது. சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் தற்போது டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே அது விற்றுத்தீர்ந்துள்ளது.ஆனால் இந்த திரையரங்குகளில் முதல் காட்சி 8 மணிக்கு தான் துவங்குகிறது. அதனால் 4 அல்லது 5 மணி காட்சிகள் இருக்குமா இருக்காதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.ஏற்கனவே டிக்கெட் விலை, அதிக காட்சிகள் உள்ளிட்ட சில விஷயங்களுக்காக தமிழக அரசு இந்த படத்திற்கு சிக்கல் உண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.அதிகாலையில் சிறப்பு ஷோ நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் இன்னமும் சிக்கல் நீடிப்பததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டால் 8 மணிக்கு தான் முதல் காட்சி துவங்கும். #Sarkar – There may not be any early morning 5 AM shows in TN.. The earliest shows may start at 8 or 9 AM.. 5 shows on #Diwali day.. Nov 6th.. This is the status as of now..— Ramesh Bala (@rameshlaus) November 1, 2018