சர்கார் இயக்குனர் முருகதாஸை கைது செய்யும் நடவடிக்கை! அவசர அவசரமாக வந்த நீதிமன்ற தீர்ப்பு இதோ

#Sarkar
#A.R.Murugadoss

சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. தீபாவளி சிறப்பு ரிலீஸாக வெளியான இப்படம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக கூடியுள்ளனர். பிரச்சனை பெரிதாக ஆனதால் ஒரு சில காட்சி நீக்கப்பட்டுள்ளது.நேற்று முருகதாஸ் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது வதந்தி என நாம் உண்மை தன்மையை கூறியிருந்தோம் ஆதாரத்துடன்.இந்நிலையில் தனது தனது வழக்கறிஞர்கள் கூட்டத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் வந்த அவர், தன்னை போலிஸார் எந்த நேரமும் கைதுசெய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்கவேண்டும் என்றும் அதை அவசர வழக்காக விசாரிக்கும்படியும் மனு தாக்கல் செய்தார்.தற்போது இப்பட விவகாரத்தில் இயக்குனர் முருகதாஸை நவம்பர் 27 ம் தேதி வரை கைது செய்யும் நடவடிக்கை விசயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.