சர்கார் டிக்கெட் கிடைக்கலைனா இதை பண்ணுங்க.. பிரபல நடிகர் வேண்டுகோள்

#Sarkar

சர்கார் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது நாள் டிக்கெட் கிடைப்பதே பலருக்கும் கடினமாக உள்ளது.இந்நிலையில் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதில் “சர்கார் வெற்றிபெற வாழ்த்துக்கள். அதே நாளில் நான் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படமும் வருகிறது. சர்கார் படத்திற்க்கு டிக்கட் கிடைக்காதவர்கள் என் படத்தை பாருங்கள்.””சர்கார் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் களவாணி மாப்பிள்ளை படத்திற்கு வந்தால்கூட படம் வெற்றி பெற்று விடும். அந்த பெருமை விஜய்யையே சேரும்” என அவர் கூறியுள்ளார்.