சர்கார் படத்தின் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டத்திற்கு பிரபல திரையரங்கின் மாஸான பிளான்கள் இதோ!

#Vijay
#Sarkar
#Theatre

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் பல தளபதி ரசிகர்கள் தத்தளித்து வருகின்றனர்.இந்நிலையில் சர்கார் படத்தின் முதல் நாள் முதல் ஷோவை எப்படி எல்லாம் கொண்டாட உள்ளோம் என்பதை திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கான ராம் முத்துராம் சினிமாஸ் மாஸான பிளான்களுடன் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் இந்த கொண்டாட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கே ஆரம்பிக்க உள்ளோம். 175 அடியில் கட் அவுட்டை உருவாக்கியுள்ளது மட்டுமில்லாமல் இதே போன்ற மற்றொரு கட் அவுட்டையும் உருவாக்கவுள்ளோம்.DJயில் நிகழ்ச்சிகள், தளபதியின் விஜய்யின் ஹிட் பாடல்கள் என திரையரங்கமே அதிர போகிறது. இது எல்லாத்தையும் விட முக்கியமாக பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட விஜய்யின் AVIயை திரையிட உள்ளோம். இந்த வீடியோ வழக்கம் போல் உள்ளாமல் வித்தியாசமாக இருக்கும், ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.மெர்சலின் ஆளப்போறான் தமிழன் எல்லா விதமான ரசிகர்களுக்கும் பிடித்த காரணத்தினால் இதை ஃபர்ஸ்ட் ஷோவுக்கு முன்னர் திரையில் காட்ட உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.