சர்கார் படத்திற்காக செய்யப்பட்ட பிரம்மாண்டம்! ஆனால் கடைசியில் நடந்ததோ – ரசிகர்கள் அதிர்ச்சி

#Sarkar
#Vijay Fans

உலகின் பல நாடுகள் நாளை மறுநாள் சர்கார் படம் ரிலீஸாகவுள்ளது. இந்த வருட தீபாவளி ஸ்பெஷாலாக விஜய் நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகவுள்ளது.விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களுக்குள்ளேயே பேனர், ஃபிளக்ஸ், கட்டவுட வைப்பதில் கடும் போட்டி இருக்கும். கேரளாவில் விஜய்யை ரசிக்கும் கூட்டம் பெருமளவில் உள்ளது.இந்நிலையில் சர்கார் படத்திற்கு கேரளாவின் கொல்லம் பகுதி ரசிகர்கள் பிரம்மாண்ட கட்டவுட் வைத்திருந்தனர். தற்போது பலத்த மழையும், காற்றும் வீசும் சூழ்நிலை இருப்பதால் இந்த கட்டவுட்டை பாதுகாப்பு கருதி கழற்றிவிட்டதாக தகவல் வெளியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு வருத்தத்துடன் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.