சர்கார் படத்தை இந்த முக்கியமான ஏரியாவில் வெளியிடுவது இவர்கள் தானாம்!

#Sarkar

விஜய் நடிப்பில் சர்க்கார் வரும் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகவுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது.ஏற்கனவே பாடல்கள் வெளியாகி இணையதளத்தின் மூலம் ஹிட்டாகிவிட்டன. பிரம்மாண்ட அளவில் இசை வெளியீட்டு விழாவும் அண்மையில் நடைபெற்று முடிந்தது.படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கோவை மாவட்டத்தில் கந்தசாமி ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறதாம். இவர்கள் கடைசியாக சீமராஜா படத்தை வெளியிட்டிருந்தார்கள்.