சர்கார் படம் வெளியாகியுள்ள நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் எந்த படத்திற்கு சென்றுள்ளார் பாருங்க!

#Vijay
#Udhayanidhi Stalin
#Sarkar

விஜய் நடித்துள்ள சர்கார் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்திற்கு தான் பல மாதங்களாக காத்திருந்த தளபதி ரசிகர்கள் கூட்ட கூட்டமாக சென்று வருகின்றனர்.தியேட்டருக்கே போகாத திரையுல பிரபலங்கள் கூட இந்த சர்கார் படத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய படம் வெளியாகியுள்ள நேரத்தில் சில வாரங்களுக்கு முன் ரிலீஸான வடசென்னை படத்திற்கு சென்று வந்துள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.அதுவும் இந்த வடசென்னை படத்திற்கு அவர் இரண்டாவது முறையாக சென்றுள்ளாராம். சர்கார் படம் வெளியாகியுள்ள இந்த நேரத்தில் இப்படியொரு ட்விட்டை பார்த்த தளபதி ரசிகர்கள் உதய் மீது தங்களது கோபங்களை கொட்டி வருகின்றனர்.ஆனால் சர்கார் படத்தை நேற்றிரவே உதய் பார்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.#VadaChennai 2nd time 😇— Udhay (@Udhaystalin) November 6, 2018