சர்கார் பட கதை திருட்டு பிரச்சனை குறித்து முருகதாஸிற்கு பிரபல நடிகையின் கேள்வி- ஆமாம் இதுவும் சரியான கேள்வி தானே

#Sarkar
#A.R.Murugadoss
#Kasthuri

விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் படத்திற்கு ஒரு பயங்கர பிரச்சனை. ஒரே ஒரு காட்சியில் விஜய் பேசும் விஷயங்கள் மிக தவறு என ஒரு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக பிரச்சனை செய்தார்கள். ஒரு வழியாக பிரச்சனைகளை தாண்டி படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிவிட்டது.இப்போது சர்கார் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் என்று சந்தோஷப்பட உடனே கதை திருட்டு பிரச்சனை வந்துவிட்டது, அதுவும் இப்போது முடிந்துவிட்டது.அண்மையில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை கஸ்தூரி பேசும்போது, முருகதாஸ் ஒரு ஹாலிவுட் படத்தின் கரு எடுத்து கஜினி எடுத்தார். தமிழ்நாட்டில் இப்போது உள்ள இயக்குனர் மீது வராத கதை திருட்டு பிரச்சனை குறிப்பிட்டு முருகதாஸ் மீது மட்டும் வருவது ஏன் என கேள்வி வருகிறது.இதுபோன்ற கதை விஷயத்தில் முருகதாஸ் கொஞ்சம் கவனமாக, இதுபோன்ற குற்றச்சாட்டு எழாத வகையில் அவருடைய கவனம் இருந்திருக்க வேண்டும் என பேசியுள்ளார்.