சர்கார் பட சர்ச்சை நேரத்தில் மர்மமான விசயத்தை வைத்து புயலை கிளப்பும் முக்கிய சேனல்! என்ன நடக்கப்போகுதோ

#Sarkar
#Television

விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. உலகளவில் வசூல் நல்ல முறையாக இருந்து வருகிறது.அதை பற்றிய வசூல் விபரங்களை முன்பே பதிவிட்டிருந்தோம். இன்னும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் தற்போது படத்தின் சில காட்சிகள் அரசியல் சர்ச்சைகளை சந்திதது.ஆளும் கட்சியனரால் படத்திற்கு வந்த மிரட்டலால் படத்திலிருந்து கோமளவல்லி என்ற பெயர் Buzzer போடப்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச நலதிட்டங்களை எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தி சானல் ஜெயலலிதா மரணத்தில் மர்மம்! இதுவரை வெளிவராத அதிரவைக்கும் உண்மைகள் என புலன் விசாரனை நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணம் மர்மாக இருப்பதால் மக்கள் பலருக்கும் ஆளும் கட்சியினர் மீது கடும் அதிருப்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதா மரணத்தில் மர்மம்! இதுவரை வெளிவராத அதிரவைக்கும் உண்மைகள் “புலன் விசாரனை” நாளை மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு உங்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் #SunNews #Jayalalitha pic.twitter.com/wrVASJ7n2p— Sun News (@sunnewstamil) November 9, 2018