சர்கார் பட பிரச்சனையினால் பாக்யராஜ் ராஜினாமா- எழுத்தாளர் சங்கம் என்ன இப்படி செய்துவிட்டது

#K.Bhagyaraj
#Sarkar

விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் பல பிரச்சனைகளை கடந்து வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்த பிரச்சனைகளில் மிக தீவிரமடைந்தது என்றால் அது கதை திருட்டு விவகாரம் தான்.ஏனென்றால் இந்த பிரச்சனையில் தான் படம் குறித்த நேரத்தில் திரையிடப்படுமா என்ற சந்தேகமே எழுந்தது. இந்த பிரச்சனை இவ்வளவு தீவிரமடைய ஒரே காரணம் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ்.மற்ற யார் சொல்லியிருந்தாலும் ரசிகர்கள் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு வழியாக இப்பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாகவோ என்னவோ பாக்யராஜ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாக்யராஜின் இந்த ராஜினாமாவை எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பாக்யராஜிடம் நீங்களே இந்த பதவியில் நீடிக்க விரும்புகின்றோம் என தெரிவித்தனராம்.ஏனென்றால் அவர்கள் நல்ல ஒரு தலைவரை இழக்க விரும்பவில்லை.