சர்கார் பட பிரச்சனையில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய கமல்ஹாசன்! அரசியல் வாதிகளுக்கு சரியான பதிலடி இதோ

#Sarkar
#Vijay
#Kamal Haasan

சர்கார் படத்தில் பல காட்சிகள் அதிலும் அரசின் இலவச திட்டங்களை எதிர்ப்பது போன்ற விசயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. பல இடங்கள் அதிமுக வை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். சில தியேட்டர்களில் படம் ஓடாமல் செய்து பிரச்சனை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கமல்ஹாசன் விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு பிரச்சனை செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2018