சர்கார் பிரச்சனை முடிந்தும் பாக்யராஜ்க்கு வந்த புதுபிரச்சனை!

#Sarkar
#K.Bhagyaraj

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த சர்கார் படம் கடந்த சில நாட்களாக கதை சர்ச்சையில் சிக்கி பின் தீர்வு காணப்பட்டது. இதில் எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் கருத்தால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருந்தார்கள்.இதனால் அவரை கடுமையாக விமர்சித்து வந்தார்கள். இதைவிட அவரின் மகன் விஜய்யின் தீவிர ரசிகர் என தெரிந்தும் அவரையும் கடுமையாக திட்டினார்கள்.இந்நிலையில் பாக்யராஜ் சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தீர்வளித்தது போல பல இயக்குனர்களும் தங்கள் கதை பிரச்சனைகளுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நீதி கேட்டு வருகின்றனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.