சர்கார் ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா – பிரம்மாண்ட தகவல்

#Sarkar
#Vijay
#A.R.Murugadoss
#Keerthy Suresh

தளபதி விஜய்யின் சர்கார் படத்திற்கு தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அங்கு விஜய்க்கு 175 அடி கட்அவுட் வைத்ததை கூட பார்த்தோம்.சர்கார் கேரளாவில் மட்டும் 402 திரையரங்குகளில் வெளிவருகிறது. அதில் பலவற்றில் முதல் நாளில் தொடர்ந்து பல ஷோ திரையிடப்படவுள்ளது. முதல் நாளில் மட்டும் 1700 காட்சிகள் போடப்படவுள்ளது.51 திரையரங்குகளில் 24 மணி நேரத்திற்கு மாரத்தான் ஷோகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் ஷோ 300 நடத்தப்படவுள்ளது, அதில் 25 பெண்களுக்காக மட்டும்.சர்கார் படத்தின் ரிலீசுக்கு முன்பே கேரளாவில் தற்போது முன்பதிவு மூலம் 3 கோடி வருவாய் வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.