சர்கார் ரிலீஸ் இருக்கட்டும், வந்த இரண்டே நாட்களில் சர்கார் டீசரின் சாதனையை ஓரங்கட்டிய ஷாருக்கான்!

#Vijay
#Sarkar
#Shahrukh Khan

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது.இந்த டீசர் வெளியான 24 மணிநேரத்திலயே 10 மில்லியன் பார்வைகள், 1 மில்லியன் லைக்ஸ்கள் என பல சாதனைகளை செய்தது. இதனால் இந்த சாதனைகளை வேறொரு இந்திய சினிமா படம் படைக்க எப்படியோ சில வருடங்களாவது ஆகும் என நினைத்திருந்த நிலையில் சமீபத்தில் வந்த ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரைலர் அத்தனை சாதனைகளையும் முறியடித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த டிரைலர் சர்கார் டீசர் இதுவரை படைத்துள்ள அத்தனை பார்வை, லைக்ஸ் சாதனைகளையும் முறியடித்தது மட்டுமில்லாமல் 4 கோடி பார்வையாளர்களையும் 14 லட்சம் லைக்ஸ்களை பெற்ற போதே இந்திய சினிமாவில் எந்த படமும் செய்யாத புதிய சாதனையை படைத்தது.மேலும் இந்த ஜீரோ படத்தின் டிரைலர் இதுவரை மட்டுமே 71 மில்லியன் பார்வைகளையும் 1.6 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.