சர்கார், 2.0 படங்களுக்கு இடையில் இத்தனை படங்கள் போட்டியா! லிஸ்ட் இதோ

#Sarkar
#2.0 (Enthiran 2)

விஜய் நடிப்பில் சர்கார் நாளை மறுநாள் உலகின் பல நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.மேலும் ரஜினிகாந்த சங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படம் வரும் நவம்பர் 29 ல் வெளியாகவுள்ளது. இரண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள். அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.இதனிடையே அதனோடு போட்டி போடும் படங்கள் கடைசி நேரத்தில் தள்ளிப்போவது சகஜமான ஒன்று தான். அதே வேளையில் தங்கள் பட வசூலை பாதிக்கா வண்ணம் சிறுபடங்கள் மிகவும் கவனமாக இருந்தாலும் சோதனை தான்.தற்போது சர்கார் படத்தின் 10 நாட்கள் கழித்து, 2.0 படத்திற்கு 13 நாட்கள் அதாவது 16 ம் தேதி 4 படங்கள் ரிலீஸாகவுள்ளது. இதில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி, விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா, செய் என நான்கு படங்கள் வெளிவருகிறதாம்.