சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் – ஐநாவிடம் தீர்மானத்தை வழங்கியது அமெரிக்கா

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்த போதும், சீனா முட்டுக்கட்டை போட்டது.ஐநா பாதுகாப்பு அவையில் மசூத் அசார் குறித்த தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது 4-வது முறையாகும். மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவை என சீனா காரணம் கூறியது.

இந்நிலையில் மசூத் அசாரரின் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா நேரடியாக அனுப்பியுள்ளது. நேரடியாக அமெரிக்கா தீர்மானத்தை அனுப்பியுள்ளதால், தீர்மானத்துக்கான எதிர்ப்பை சீனா விலக்கிக்கொண்டாலே போதும், சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்படுவார்.

இதனிடையே, முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சீனா கைவிட வேண்டும் என அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சீனா தனது நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லீம்களை துன்புறுத்திக் கொண்டே, மறுபுறத்தில் ஐநாவில் பயங்கரவாத இயக்கங்கள் மீது தடை விதிப்பதில் இருந்து பாதுகாக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை வெட்கக்கேடானது’ என்று பதிவிட்டுள்ளார்.

The world cannot afford China’s shameful hypocrisy toward Muslims. On one hand, China abuses more than a million Muslims at home, but on the other it protects violent Islamic terrorist groups from sanctions at the UN.Loading… — Secretary Pompeo (@SecPompeo) March 27, 2019

Also watch