சாக்‌ஷிக்கு தோனி செய்யுற காரியத்தை பாருங்க; கேப்டன் கூல் ’தல’ இப்போ ஹஸ்பண்ட் கூல் ஆகிட்டார்!

கிரிக்கெட் உலகில் மகேந்திரசிங் தோனிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆடுகளத்தில் ’கேப்டன் கூல்’ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இந்நிலையில் சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதைப் பார்க்கும் போது, தோனி ஒரு ’ஹஸ்பண்ட் கூல்’ என்பது நிரூபணமாகிறது. அதாவது, உலகின் சிறந்த கணவன்மார்களில் ஒருவர். மனைவி மீது அக்கறை செலுத்தி, அதிக அன்பு செலுத்துபவர் என்றெல்லாம் கூறத் தோன்றுகிறது.

View this post on Instagram A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on Nov 18, 2018 at 3:19am PST

நம்மில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராமில் மீம்ஸ், உணவு சம்பந்தமான வீடியோக்கள் பார்த்துக் கொண்டு பிஸியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தோனியின் ரசிகர்களோ, சாக்‌ஷியின் பதிவிற்கு கமெண்ட், மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியென்ன போஸ்ட் என்று மிகுந்த ஆவலாக இருக்கிறதா? சாக்‌ஷி அணிந்துள்ள ஷூவிற்கு தோனி லேஸின் முடிச்சைப் போடுகிறார். அந்தப் பதிவில், ”நீங்கள் தான் ஷூக்களை வாங்கி தந்தீர்கள். எனவே நீங்கள் தான் லேஸைக் கட்டி விட வேண்டும்” என்று சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram Game over, had a nice sleep now back to Daddy’s duties A post shared by M S Dhoni (@mahi7781) on Apr 26, 2018 at 2:54am PDT

இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தோனிக்கு முதல் முறையல்ல. தனது மகள் ஸிவா உடன் சாப்பிடுவது, நடனம் ஆடுவது, பணிவிடைகள் செய்வது என ஏராளமான வீடியோக்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி உள்ளது.

View this post on Instagram You paid for the shoes so you tie them tooo 🤗😘 !!! Photo Credit – @k.a.b.b.s A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on Dec 15, 2018 at 9:54am PST

தற்போது கிரிக்கெட்டில் இருந்து சிறிய ஓய்வில் இருக்கும் தோனி, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கெத்துடன் தோனியை மீண்டும் களத்தில் காணலாம்.