சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் உயா்வு

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 70 டாலா்களை தொட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கக்கூடிய ரஷ்யாவும், கச்சா எண்ணெய்யை அதிகம் விநியோகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதுபோலவே, டாலரின் மதிப்பு சரிந்து வருவதாலும் அதன் தாக்கம் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, 2014 டிசம்பரில் இதே விலையில் கச்சா எண்ணெய் விற்பனையானது. மூன்றாண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையாவதால், அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவாக இருந்தநிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தியதால், அதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை. மேலும் தற்போது மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வாியை குறைக்க வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Comments are closed.