சினிமாவில் இருந்து விலகியபின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்! முதல் முறையாக கூறிய அரவிந்த் சாமி

#Arvind Swamy

நடிகர் அரவிந்த் சாமி ஆரம்பத்தில் முன்னணி ஹீரோவாக இருந்து அதன்பின் சினிமாவில் இருந்து நீண்ட காலமாக ஒதுங்கி இருந்தார்.அதன்பின் கடல், தனி ஒருவன் போன்ற படங்களின் மூலம் முன்னணி வில்லனாக தற்போது உயரத்தை தொட்டிருக்கிறார். இவ்வளவு பெரிய இடைவெளி ஏன் எடுத்தேன் என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.”நடிப்பது என் ஆசை. ஆனால் ஸ்டார் ஆவேன் என எதிர்பார்க்கவில்லை. அதன் மீது அதிக விருப்பமும் இல்லை. பிரைவசி இல்லாமல் போனது. அதனால் சினிமாவை விட்டு விலகினேன். அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் படித்தேன். பின் ஒரு தொழில் தொடங்கினேன். அது பல நாடுகளில் வெற்றிகரமாக நடந்தது.””ஆனால் அதையும் 2005ல் விட்டேன். என் குழந்தைகளை தனியாக வளர்க்கவேண்டியிருந்தது. அதில் கவனம் செலுத்தினேன். ஒரு விதத்திலும் சிக்கினேன். சினிமாவுக்கு திரும்ப வரவேண்டும் என ஆசை என்னிடம் அப்போது இல்லை.””அதன்பின் கடல் படத்திற்காக மணி சார் கூப்பிட்டார். அந்த படம் சரியாக போகவில்லை. இப்படி தோல்வியுடன் என் கேரியரை முடிக்க முடிய விரும்பவில்லை. அதனால் தான் தொடர்ந்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என படங்கள் ஒப்புக்கொள்ள ஆரம்பித்தேன்” எனகூறியுள்ளார்.