சின்மயியின் Metoo பாலியல் சர்ச்சையில் உண்மையை வெளியிட்ட பிரபல நடிகை!

#MeToo
#Chinmayi

பிரபல பின்னணி பாடகி சின்மயி அண்மையில் Metoo ல் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டுவந்தார். இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த வைரமுத்துவின் பெயர் சிக்கியது.நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த இந்த சர்ச்சையால் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சின்மயியும் கலந்துகொண்டு விளக்கம் அளித்தார்.இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் லீனா மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரும் கலந்துகொண்டனர். இது சின்மயிக்காக நடத்தப்பட்டது போல பேச்சுகள் எழுந்தது.ஆனால் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் டிவிட்டரில் நான் தென்னிந்திய திரைப்படம் பெண்கள் அமைப்பு அழைத்ததன் பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டேன். சின்மயிக்காகவோ, லீனாவுக்காகவோ இல்லை. அந்த அமைப்பிற்காக தான் சென்றேன்.ஏனென்றால் அவர்கள் பிரபலங்கள் கிடையாது. அவர்களின் குரல் இன்னும் கேட்கப்படவில்லை. சின்மயி பின்னர் தான் வந்தார். அவருக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு இருக்கிறது என்பது தெரியாது என கூறியுள்ளார்.I was invited for the #metoo pressmeet by South Indian film Womens asso, not by @Chinmayi @LeenaManimekali . Went for the association as they said becas they r not actors/ celebrities, their voice is not being heard . Chinmaye came late, she said she was not aware of pressmeet.— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 1, 2018