சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, சென்னை மாங்காடு அருகே சிறுமியை தஷ்வந்த் என்ற இளைஞர், கடத்தி பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்தார்குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பைக்குத் தப்பிச்சென்றார்.

இதனையடுத்து டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தீர விசாரித்த பிறகு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி உறுதி செய்திருந்தது.Loading… இதனை அடுத்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, தஷ்வந்த் குற்றவாளி என்பதை உச்சநீதிமன்றம் ஏற்பதாக கூறியது.

தஷ்வந்துக்கு ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால் நிச்சயம் மனுவை தள்ளுபடி செய்திருப்போம், ஆனால் தூக்குதண்டனை என்ற ஒரே காரணத்துக்காக, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

அரசியல் சாசன பிரிவு 302-ன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரிதானா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

இதனையடுத்து தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்குத் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE: