சென்னையில் SWIGGY டெலிவரி பாய்ஸ் போராட்டம்

வீடு தேடி உணவு சப்ளை செய்யும் SWIGGY நிறுவன ஊழியர்கள் சென்னையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு உணவை வரவழைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான SWIGGY யின் ஊழியர்களுக்கு, திங்கள்கிழமை முதல் ஊதியத்தில் மாற்றம் செய்யப்பட்டது.அதன்படி முதல் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு அளிக்கப்பட்டு வந்த 36 ரூபாய் ஊதியம் 35 ரூபாயாக குறைக்கப்பட்டதாகவும், அதன்பிறகு, நான்கு கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவுக்கும் ஊதியம் குறைக்கப்பட்டதாகவும் கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால், சென்னையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், உணவைத் தேடி ஓட்டல்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அது குறித்து ஏராளமானோர் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
Noticed that @swiggy_in is not working in Kodambakkam, Chennai. Anyone else has this problem ?— vamsi mohan (@nampu) December 6, 2018

What happened to @SwiggyCares @swiggy_in Chennai #swiggy pic.twitter.com/iJOHOKXEVy— Mithun (@mithun113) December 6, 2018Loading…

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள SWIGGY நிறுவனம், வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.