சென்னையை அதிர வைத்த சர்கார் படத்தின் முதல் நாள் வசூல்- இத்தனை கோடியா?

#Sarkar
#Box Office

சர்கார் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருந்த படம். தீபாவளியான நேற்று வெளியாகி எல்லா இடத்திலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி, என்ன கதை எல்லாம் பார்த்தாச்சு, அடுத்து என்ன சர்கார் படத்தின் கலெக்ஷன் விவரங்கள் தான்.படத்தின் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் முதல் நாள் சர்கார் எவ்வளவு வசூல் என்ற விவரத்தை ஏற்கெனவே கூறியிருந்தோம்.இப்போது சென்னையை பொறுத்தவரையில் முதல் நாளில் மட்டும் ரூ. 2.31 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.சென்னை வசூலில் முதல் இடத்தில் இருந்த ரஜினியின் காலா படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. முதல் நாள் சென்னையில் காலா படத்தின் வசூல். ரூ. 1.76 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.