சொந்த ஊர் செல்ல வசதியாக பொங்கலுக்கு 6 நாள் விடுமுறை!

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஜனவரி 14-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை ஜனவரி 15 முதல் 17 வரை கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 12, 13 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருந்தாலும், இடையில் 15 அன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் சென்னை போன்று வெளியூர்களில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது.இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 14 அன்று அரசு விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை எழுந்ததை அடுத்து, தமிழக அரசு அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 9 அன்று சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி 12 முதல் 17 வரை மொத்தம் 6 நாள் பொங்கலுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

Also Watch: