ஜாக்கிரதை! வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்!

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Wellness ஜாக்கிரதை! வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்! Wellness oi-Hari Priya By Hari Priya |

Published: Monday, April 15, 2019, 11:21 [IST]
பொதுவாக ஒரு சில பொருட்களை தொட்டால் பலவித அலர்ஜிகள் உண்டாகும். சில அலர்ஜிகள் ஆரம்ப நிலையில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. ஆனால், சில அலர்ஜிகள் மிக பெரிய அளவில் ஆபத்தை உண்டாக்கும். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவு முதல் பயன்படுத்தும் பொருட்கள் வரை ஆபத்தான நிலையை தரும். இது பல சமயங்களில் மிக மோசமான அளவிலான ஆபத்துகளை உண்டாக்கும். உடலில் அலர்ஜிகள் இருந்தால் அவை வெளி உறுப்புகளை மட்டும் பாதிக்காது. கூடவே உள் உறுப்புகளையும் சேர்த்தே பாதிக்கும். நாம் தொடுகின்ற எந்தெந்த பொருட்கள் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இறைச்சி சிலருக்கு சிவப்பு இறைச்சிகளை சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாது. இது தும்பல், அரிப்பு, எரிச்சல், தலை வலி போன்ற மோசமான பாதிப்புகளை தரும். எனவே உடலுக்கு ஒதுக்காத இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். வெயில் காலம் பலருக்கு வெயில் காலங்களில் தான் இந்த அல்ரஜிகளின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இவை வியர்குறு, கட்டிகள் ஆகிய வடிவில் உங்கள் உடலை பாதிக்கும். சிலருக்கு இது ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. உலோகம் செம்பு, பித்தளை, வெள்ளி மோதிரங்கள் கூட பலருக்கு ஒத்து கொள்ளாது. இது விரலை அரித்து மிக ஆபத்தான நிலைக்கே கொண்டு போய் விடும். சிலருக்கு கைகள் முழுவதும் இதன் வீரியம் பரவ தொடங்கும். MOST READ: 30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம் மேக்கப் பொருட்கள் கண்ட மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படும். குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய மேக்கப் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தினால் நிச்சயம் ஆபத்தான நிலை உண்டாகும். இது கண்கள், வாய், முகம் போன்ற பகுதிகளில் பெரும்பாலும் ஒவ்வாமையை உண்டாக்கி விடும். துணி இறுக்கமான நைலான் துணிகள் பலவித ஆபத்துகளை உடலுக்கு தர கூடும். சிலருக்கு தோல் வியாதிகள் உருவாவதற்கு இது போன்ற இறுக்கமான உடைகள் தான் காரணம். அழகாக இருக்கிறது என்பதற்காக இந்த உடைகளை இனி அணிந்து கொள்ளாதீர்கள். வேதி பொருட்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் பல வேதி பொருட்கள் நமது உடலை முழுவதுமாக தாக்க கூடும். புற்றுநோய் போன்ற அபாயகர நிலைக்கு கூட இவை உங்களை தள்ள அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக உணவுக்கு பயன்படுத்தும் கலர் பவ்டர் முதல் கை கழுவும் சோப்புகள் வரை இதே பாதிப்புகள் தான் உள்ளது. நகைகள் கண்ணை கவரும் நகைகளை பெரும்பாலும் அணிந்து கொள்வது பலருக்கு விருப்பமான ஒன்றாகும். ஆனால், இது போன்ற நகைகள் உடலை அரித்து கொஞ்சம் கொஞ்சமாக புண், அரிப்பு, ஒவ்வாமை ஆகிய பாதிப்புகளை தரும். MOST READ: உடலுறவின் போது கருவிழியின் நிறம் மாறுவதற்கு இந்த ஒன்னு தான் காரணம்..! வெயில் உடலில் வெயில் பட்டாலே அதனால் அலர்ஜி உண்டாகும் அபாயம் பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் உள்ளது. கடுமையான வெயிலில் செல்லும் போது பாதுகாப்பிற்கு துணி அல்லது குடையை பயன்படுத்தலாம். இது வெயிலின் தாக்கத்தை குறைக்கும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave a Reply

Your email address will not be published.