ஜியோக்கு போட்டியாக ஏர்டெல்லின் புதிய ரூ.398 பிளான் அறிமுகம்!

இந்திய தொலை தொடர்பு சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களில் ஏற்கனவே இருக்கும் பிளான்களுக்கு இணையாக ஏர்டெல் நிறுவனமும் இந்த புதிய ரூ.398 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தினசரி 1. 5ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையும் கிடைக்கிறது.இந்த புதிய ரூ.398 பிளானை ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமான பிளானாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் 398 ரூபாய் பிளானில் 1.5ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலும் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு நாளைக்கு 90 இலவச எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.ஏர்டெல்லில் ஏற்கனவே இருக்கும் ரூ.399க்கான பிளான் ரூ.398 போன்று பலன் தரக்கூடியதாக இல்லை. ரூ.399 பிளானில் ஒரு நாளைக்கு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்.எம்.எஸ் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.