டிராவிட் போல நடந்து கொள்ளுங்கள்: விராத் கோலிக்கு அறிவுரை கூறிய நடிகர் சித்தார்த்!!

ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்ன இந்தியக் கேப்டன் விராத் கோலிக்கு, நடிகர் சித்தார்த் டிராவிட்டைப் போல நடந்துகொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாகத் திகழ்பவர் விராத் கோலி. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரில், விராத் கோலி தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்து சாதனைப் படைத்தார். மேலும், ஒருநாள் போட்டிகளில் விரைவாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்றப் பெருமையையும் விராத் கோலி பெற்றார்.

தற்போது ஓய்வில் இருக்கும் விராத் கோலி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் வெளியிட்ட கருத்திற்குப் பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், “அவர் (விராத் கோலி) அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் சிறப்பாக இல்லை. எனக்கு இந்தியர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைக் காணவே பிடிக்கும்,” என தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்திற்குப் பதிலளித்த விராத் கோலி, “நீ இந்தியாவில் வாழக்கூடாது என நான் நினைக்கிறேன். வேறு எங்காவது போய் வாழ்க்கை நடத்து. மற்ற நாடுகளை நேசித்தால், அப்போது எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்? உனக்கு என்னைப் பிடிக்கவில்லையென்றால் கவலையில்லை. மற்ற நாட்டவர்களைப் பிடித்தால், நீ நமது நாட்டில் வாழக்கூடாது என கருதுகிறேன். உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு,” என கடுமையாக பதிலளித்தார்.

If you want to remain #KingKohli it may be time to teach yourself to think ‘What would Dravid say?’ before speaking… https://t.co/Txp1MKq1dN— Siddharth (@Actor_Siddharth) 1541655962000
அவரின் அந்தப் பதிலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சித்தார்த்தும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “நீங்கள் தொடர்ந்து கிங் கோலியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், எதிர்காலத்தில் பேசுவதற்கு முன்பாக, டிராவிட் என்ன சொல்லி இருப்பார் என நினைத்துப்பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியக் கேப்டனிடமிருந்து என்ன ஒரு முட்டாள் தனமான பதில்!

‘I don’t watch’ these’ #IndianMovies. They’re so lame. I like watching #Hollywood films.’ ‘I only watch #Bollywood.… https://t.co/yi3GW5USjU— Siddharth (@Actor_Siddharth) 1541686020000
நான் இந்தியப் படங்களை பார்க்க மாட்டேன். அவை மோசமானவை. ஹாலிவுட் படங்களை பார்ப்பதே எனக்குப் பிடிக்கும். பாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பேன். தென்னிந்தியப் படங்கள் வேடிக்கையானவை. நான் படங்கள் பார்ப்பதில்லை. நேரத்தை வீனாக்குபவை. இதுபோன்ற வார்த்தைகளை நிறைய கேட்கிறோம். அதை கேட்டுக் கொண்டு, அதை மறந்து விடுவோம். டிராவிட்டைப் போல இருங்கள்,” என கூறியுள்ளார்.