டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

வெஸ்ட இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச முடிவுசெய்தது. முதலில் பேட் செய்ய வந்த விண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

It’s all over here at the Eden Gardens. #TeamIndia win by 5 wickets #INDvWI https://t.co/zxDu8K9EYz— BCCI (@BCCI) 1541350090000 110 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன் மூலம் முதல் டி20யை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 1-0 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.