டொனால்ட் ட்ரம்ப் – கிம் ஜாங் அன் மீண்டும் சந்திக்க வாய்ப்பு!

அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாகச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இவர்கள் இரண்டாவது முறையாகக் கடந்த மாதம் வியட்நாமில் சந்தித்தனர்.அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க அமெரிக்கா கோரியதாகவும், பதிலுக்கு வடகொரிய மீதான பொருளாதார தடையை நீக்க வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், இதில் சுமூக நிலை ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் தயாராக உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: