தந்தையின் நகைக்கடையில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த மகன் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியில், முகமது தாகா என்பவரின் நகைக்கடையில், பாலசுப்பிரமணியன் பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த தாகா, சென்னையில் உள்ள தனது மகனிடம் அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு நகைகளை பெற்று வருமாறு கூறியுள்ளார்.

பணத்தை எடுத்துக்கொண்டு ராஜபாளையம் வந்த பாலசுப்பிரமணியன், அங்கிருந்து திருச்சிக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், தனிப்படை அமைத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர். தென்காசியில் இருந்து பாலசுப்பிரமணியனை பின்தொடர்ந்து வந்த கும்பலே கொள்ளையை நிகழ்த்தியது முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது.

அதுமட்டுமின்றி, நகை கடை உரிமையாளர் தாகாவின் மற்றொரு மகனான சையது ஜிலாமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தனக்கு 15 லட்சம், தனது நண்பர்களுக்கு 15 லட்சம் எனக்கூறி கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார் ஜிலாமி.

அதனை தொடர்ந்து ஜிலாமியையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Watch Also Video…

Loading…

Also see…