தனுஷ் படத்திற்கு பிரான்ஸில் இப்படியொரு வரவேற்பா! ஹாலிவுட் இயக்குனரே வெளியிட்ட தகவல்

#Dhanush
#Hollywood

தமிழ் சினிமாவில் கடந்த 17 வருடங்களாக தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் தரமான படங்கள் நிறையவற்றை பார்த்தோம்.புதுப்பேட்டை, ஆடுகளம் என முத்திரை பதித்த இவரது நடிப்பில் அசுரன் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ள தனுஷின் நடிப்பில் கடந்த ஆண்டு தி எக்ஸ்ட்ரானரி ஜெர்னி ஆப் தி ஃபகிர் என்ற ஹாலிவுட் படம் வெளியாகியிருந்தது.ஆங்கிலம் மற்றும் french மொழிகளில் வெளியாகியிருந்த இப்படத்திற்கு பிரான்ஸில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனை இப்படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தனுஷை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்கு தனுஷும் தற்போது நன்றியினை தெரிவித்துள்ளார்.Thank you ken. You made it possible. Super thrilled about this. https://t.co/6gd9B3uBrL— Dhanush (@dhanushkraja) May 15, 2019