தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததாக 700 பேர் மீது வழக்குப்பதிவு!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டியையின் போது பட்டாசுகள் வெடிக்க நேரத்தை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி கூடுதலாக நேரம் பெற்றிருந்தது.தீபாவளி பண்டியை இன்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் 700 பேர் மீது சுமார் 622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 225 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also See..