தமிழர்கள் காணாமல் போன விவகாரம்: இலங்கை ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு

இலங்கையில் தமிழர்கள் காணாமல் போன விவகாரத்தில், ராணுவ தளபதி வீந்திரா விஜயகுணரத்னே-வைக் கைது செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் ஏற்பட்ட உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்கள் காணாமல் போனார்கள். 2008-2009-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற இறுதி போரில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கை, கொழும்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்ப உதவியதாக, அப்போதைய கடற்படை அதிகாரியும், தற்போதைய ராணுவ தளபதியுமான ரவி விஜேகுணரத்னே மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் காணமல் போனதாக கூறப்பட்ட 11 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களின்  உடல்கள் மீட்கப்படாத நிலையில், ராணுவ தளபதியை நவம்பர் 9-ம் தேதி ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி ஆஜர்படுத்தாவிடில் இவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also see…