தலையில என்ன தமிழ்நாடு மேப்பா? அடிபட்டு கிடக்கும் ஹேடனை கிண்டல் செய்த வீரர்!!

நீர் சறுக்கு விளையாட்டின் போது அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹேடனை, ஜாண்டி ரோட்ஸ் கிண்டல் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ஹேடன், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். ஓய்விற்குப் பின் வர்ணனையாளராக இருந்து வரும் ஹேடன், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளிலும் வர்ணனை செய்துள்ளார். அத்தோடு, தமிழகத்தின் பல நகரங்களுக்குச் சென்று, தமிழ்நாடு பிரீமியர் லீக்கை விளம்பரமும் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மேத்யூ ஹேடன், ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் கடற்கரையில் நீர் சறுக்கு செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், அவரது கழுத்து, தலை மற்றும் முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

View this post on Instagram Ok. Last attention seeking post I promise. Just wanted to say a big thank you to all our mates on Straddie who have been so supportive.✅🏄🏽♂️🙏 Especially Ben & Sue Kelley for the fast diagnosis with MRI, CT scan. Fractured C6, torn C5,C4 ligaments safe to say I truly have dodged a bullet. Thank you everyone ❤️ On the road to recovery 🏄🏽♂️🎣 A post shared by Matthew Hayden (@haydos359) on Oct 7, 2018 at 3:44am PDT

தற்போது, அவரது உடல்நிலை சீராகி வரும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவது போன்ற படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், “நெத்தியில் இருப்பது என்ன தமிழ்நாட்டு கடற்கரையின் வரைபடமா?, என்ன ஒரு கமிட்மென்ட். எங்கள மாதிரி சாப்ட் ஆனவங்க எல்லாம், ஈசியா டாட்டூ தான் குத்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜாண்டி ரோட்ஸ் இந்தியா நாட்டின் மீது கொண்ட பாசம் காரணமாக தனது மகளுக்கு இந்தியா என பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.