தல 59வது படத்தில் அஜித்திற்கு தங்கச்சியாக பிரபல தொகுப்பாளினி நடிக்கிறாரா?

#Ajith Kumar
#VJ Jacqueline
#Thala 59

அஜித்தின் விஸ்வாசம் படம் தான் சமீபத்தில் வந்த படங்களில் செம ஹிட். பாக்ஸ் ஆபிஸை தாண்டி மக்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.இப்படத்தை தொடர்ந்து அஜித் தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.படத்திற்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலின் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன.ஆனால் உண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாக்குலின் காமெடிக்காக அப்படி ஒரு விஷயத்தை கூறியுள்ளார், உண்மையில் அவர் நடிக்கவில்லை.மாறாக அஜித்துடன் நடிப்பது என்ன அவர் இருக்கும் காட்சியில் ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைத்தாலே நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.