தல-59 வினோத் ஓகே, தல-60 இயக்குனர் யார் தெரியுமா? இதோ கசிந்த தகவல்

#Ajith Kumar

தல மீண்டும் தன் ரசிகர்கள் விருப்பப்படி உடனே அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் போனிகபூர் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கின்றார்.இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கவுள்ளார், இவை பிங்க் படத்தின் ரீமேக் என்றும் அறிவித்துவிட்டனர்.இந்நிலையில் அஜித்தின் 60-வது படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார், இப்படத்தை யார் இயக்குவது என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.வினோத்துடன் அஜித் இரண்டு படங்களில் பணியாற்றவுள்ளார், அதனால், அவராக கூட இருக்கலாம், இல்லையென்றால் சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன் இவர்களில் யாராவது ஒருவராக இருக்கலாம்.ஆனால், எது எப்படியோ இந்த மூன்று பேர்களில் ஒருவர் தான் தல அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.