தல59ல் அஜித்துடன் நடிக்கும் ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இதுதான்! வெளியான உண்மை தகவல்

 

சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்திற்கு அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பூஜை தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் படத்தில் நடிக்க இருக்கும் சில நடிகர்களுடன் இன்று நடந்தது. இதில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவும் இருந்தார்.இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அஜித்திற்கு எதிராக வாதாடும் வக்கீல் கதாபாத்திரமாம். மேலும் இப்படத்தில் அஜித்தும் வக்கீல் கதாபாத்திரத்தில் தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.