திருக்குருகாவூர்வெள்ளடை

0

இறைவர் திருப்பெயர்:
சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்.

இறைவியார் திருப்பெயர்:
நீலோத்பலவிசாலாட்சி, காவியங்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் :
பால் கிணறு.

வழிபட்டோர்:
சம்பந்தர் , சுந்தரர் .

தல வரலாறு
 

சோழநாட்டு காவிரி வடகரையில் இது 13வது தலமாகும்.
 
ஊர் = குருகாவூர்; கோயில் = வெள்ளடை.
 
பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியைப் போக்கியருளிய தலம்.

 
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் – சுண்ணவெண் ணீறணி (3-124)
2. சுந்தரர் – இத்தனை யாமாற்றை (7-29).
சிறப்புக்கள்

தை அமாவாசை நாளில் இறைவன் தல தீர்த்தமான பால் கிணற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது.
 
(சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியப்போக்கி அற்புதம் நிகழ்த்திய இடம் “வரிசைப்பற்று” என்றும், “இடமணல்” என்றும் மக்களால் சொல்லப்படுகிறது. அவ்விடம் தென்திருமுல்லைவாயில் செல்லும் வழியில், இங்கிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது; அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோயிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
 
இத்தலத்து இறைவன் பெயரை வெள்ளடை மகாதேவர் என்றும், குருகாவூர் வெள்ளடையப்பன் என்றும் மேற்படி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கல்வெட்டுக்கல் கோயிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீர்காழி – தென் திருமுல்லைவாயில் சாலையில், வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்கு பிரிந்து செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்றால் குருகாவூரை அடையலாம். தற்போது மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது. தொடர்புக்கு :- 92456 12705.

Leave A Reply

Your email address will not be published.