திருமணத்தை மீறிய காதலால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

கன்னியாகுமரியில் திருமணத்தை மீறிய காதல் விவகாரத்தில், காதலியுடன் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

குளச்சல் அருகே மினி பேருந்து ஓட்டுநர் பிரதீப் என்பவருக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இலக்குமிபுரத்தில் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்ட போது, மாணவியை ஓட்டுநர் பிரதீப் தாக்கியுள்ளார். இதனால், அப்பகுதியிலிருந்தவர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அப்போது, பிரதீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இருப்பினும், திருமணமானதை மறைத்து பிரதீப் காதலித்து வந்ததாகவும், அவருடன் தான் செல்வேன் என கல்லூரி மாணவி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆனாலும், பிரதீப்பை அவரது மனைவியுடனும், மாணவியை அவரது பெற்றோருடனும் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவியின் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பிரதீப், தன்னுடன் வாழ வருமாறு கல்லூரி மாணவியை அழைத்துள்ளார்.

அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் வீட்டின் முன் பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு அவர் தீக்குளித்தார். படுகாயமடைந்த பிரதீப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also see…