திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.கஜா புயல் நிவாரணப்பணிகள் நடப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதற்கிடையே, திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியது.

ஆளும் அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்தது. பாஜக தலைவர்களோ தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து அறிக்கை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை அனுப்பினார். இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு தலைமை தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.Loading… தேர்தல் ஆணைய அறிவிப்பு

தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்படுவதும் பின்னர் அது ரத்து செய்யப்படுவதும் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக இருப்பதாக கருத்து வெளியாகியுள்ளது.

Also See..