தீபாவளிக்கு சர்கார் பட ரிலீஸின் போது ரசிகர்களுக்கு சூப்பர் டபுள் ட்ரீட்- இது கொண்டாட்ட நேரம்

#Sarkar
#2.0 (Enthiran 2)

முருகதாஸை நம்பி விஜய் கதை ஓகே சொல்ல தளபதியை முழுவதும் நம்பி சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் சர்கார்.இந்த படம் ஆரம்பத்தில் இருந்து பெரியதாகவே பேசப்பட்டு வந்தது. அதற்கு இன்னொரு ஸ்பெஷல் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசை. பாடல்கள் அனைத்தும் வெளியாகி செம ஹிட், விஜய் நடனத்துடன் அப்பாடல்களை பார்ப்பது மட்டும் தான் மீதம் உள்ளது.தீபாவளிக்கு இப்படத்தை திரையரங்கில் பார்ப்பது ஒரு ஸ்பெஷல் மற்றொரு விஷயம் என்னவென்றால் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ரஜினியின் 2.0 படத்தின் டிரைலர் பட இடைவேளையில் திரையிடப்பட இருக்கிறதாம்.இந்த விஷயம் கண்டிப்பாக தீபாவளிக்கு ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக தான் இருக்கும்.